கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப்பணியக அம்பாறை மாவட்ட காரியாலயம் கடந்த 2010 ம் ஆண்டு தொடக்கம் இதுவரை மாவட்ட காரியாலயமாக அக்கரைப்பற்றில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதுவரை காலமும் இதற்கான நிரந்தர கட்டிடம் ஒன்றை பெறுவதற்கான முயற்சிகள் பல மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அம்பாரைக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அக்காரியாலயத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் நஸீம் இப்ராஹிம் ரஸி பகிரங்க வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.
அவரது கோரிக்கையில் மேலும், அக்காரியாலயத்தின் மூலம் எத்தனை ஆசிரியர்கள் எத்தனை மாணவ செல்வங்கள் பயனடைகிறார்கள் என்பன தெரிந்தும் தெரியாமலும் பல புத்திஜீவிகளும்; பல அரசியல்வாதிகளும்; தனவந்தர்களும் உள்ளனர். இந்த காரியாலயத்துக்கு நிரந்தர கட்டிடம் ஒன்றை பெற்றுத்தருமாறு கோரி நானும் சக ஊழியர்களும் போகாத அரசியல்வாதிகளும் கிடையாது; அரசாங்க உயர் அதிகாரிகளும் கிடையாது. யாரும் அதை கணகெடுப்பதாக இல்லை. தற்போது இதன் பெறுமதி விளங்கிய பெரும்பான்மை இன மக்கள் இக்காரியாலயத்தை எதிர்வரும் 2022/05/01 திகதி அம்பாறைக்கு இடமாற்றமாக்கி எடுத்துச் செல்ல ஆயத்தமாகி விட்டார்கள்.
இது தொடர்பில் நாங்கள் பேசினால் இங்கு வேலை செய்வதனால் அம்பாரைக்கு காரியாலயம் சென்றால் சற்று சிரமம் தானே என்ற நோக்கத்துடன் நோக்குகிறார்கள். நாங்கள் இலங்கையில் எங்கு சென்று வேலை செய்வதாக பதவிப்பிரமாணம் எடுத்தவர்கள். சிரமமாக இருந்ததாலும் வேலை செய்தே ஆகவேண்டும். ஆகவே இது எனது பிரச்சினை அல்ல. சிறுபான்மை சமூகத்துக்கான பிரச்சினை. இம்மாவட்ட காரியாலயம் அம்பாரைக்கு செல்லாமல் இருக்க அக்கரைப்பற்றில் மாவட்ட காரியாலயத்துக்கு பொருத்தமான இடமொன்றை பெற்று தாருங்கள் என சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
சாய்ந்தமருதில் கிழக்கின் கேடயத்தின் முயற்சியில் அண்மையில் இளைஞர் சேவைகள் மன்ற மாகாண காரியாலயம் செல்வது இடை நிறுத்தப்பட்டது. இதே போன்று இதனையும் செய்து தாருங்கள் என்று கிழக்கின் கேடயத்திடம் கேட்டுக் கொள்வதுடன் இக்காரியாலயம் இடமாற்றமாகி போவதை இடைநிறுத்துவது முக்கியமல்ல பொருத்தமான இடத்தை பெற்று தரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment