பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய அலுவல்களை சட்ட ரீதியாகவும் நிலையாகவும் பேணுவதற்கு நான்கு அமைச்சர்கள் நியமனம்



முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை, பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளை சட்ட ரீதியாகவும் நிலையாகவும் பேணுவதற்காக நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் இன்று, (04) முற்பகல் நியமித்துள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் அமைச்சுப் பதவி மற்றும் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சபைத் தலைவர் மற்றும் பிரதம கொறடா ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளதால், இந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவுகின்ற தேசிய சவால்களை தீர்ப்பதற்கு பங்களிக்குமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஜனாதிபதி அவர்கள் ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் அவர்களுடன் கலந்துரையாடி நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும்.

ஒரு நாடு என்ற வகையில் எதிர்நோக்கும் பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்கும் நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று, (04) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

01. கல்வி - திரு. தினேஷ் குணவர்தன (சபைத் தலைவர்)

02. வெளிநாட்டலுவல்கள் - பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

03. நெடுஞ்சாலைகள் - திரு. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (ஆளுங் கட்சியின் பிரதம கொறடா)

04. நிதி - திரு. அலி சப்ரி

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
04.04.2022
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :