ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமானம் செய்யும் நிகழ்வு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் தலைமையில் நேற்று ஏறாவூர் நகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது கட்சியின் அரசியல் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்ட நான்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சுபையிர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மா நகர சபை உறுப்பினராக
அப்துல் காதர் முகம்மது லத்தீப் ,ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களாக எம்.எஸ்.ஏ.கபூர்தீன்,அப்துல் மஜீத் சப்றாவும், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினராக அலியார் றஹ்மா வீவியும் புதிய உறுப்பினர்களாக
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் மற்றும் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.நழீம் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
இதன் போது நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் கட்சியின் ஆதரவாளர் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment