இடைக்கால அரசோ, தேசிய அரசோ தீர்வாகாது.-மஹ்தி



ஹஸ்பர்-
ட்சி பேதங்களுக்கப்பால் நாடு முழுவதும் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இடைக்கால அரசோ, தேசிய அரசோ தீர்வாகாது என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம் எம் மஹ்தி தெரிவித்துள்ளார்.
இன்று(05)செவ்வாய்க் கிழமை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

அரசியல்வாதிகள், மாணவர்கள், பொதுமக்கள் என சகல தரப்பினரும் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் இரவு பகல் பாராது மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப் போராட்டக் காரர்களை திருப்திப் படுத்தும் நோக்கில் மத்திய வங்கி ஆளுநர் உட்பட அமைச்சர்களும் பதவி விலகி இடைக்கால அரசாங்கத்தை அல்லது தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதியின் முயற்சி நடைபெறுகின்றது.
ஆனாலும் நாட்டு மக்களோ ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உட்பட அனைவரும் பதவி விலகுவதோடு தேர்தல் ஒன்றின் மூலம் ஊழல்வாதிகள், சந்தர்ப்பவாதிகள், கடும்போக்கு வாதிகள் இல்லாத சிறந்த பொருளாதார, சிந்தனை வாதிகளை உள்ளடக்கிய புதிய அரசாங்கம் ஒன்றையே எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த ஆட்சிக்காலங்களில் நடந்தேறிய ஊழல்களுக்கு எதிராக மிகத் தீவிரமான விசாரணைகளை நடாத்தி அவர்களால் கொள்ளையிடப்பட்ட அனைத்து சொத்துக்களையும் பரிமுதல் செய்து நாட்டின் தேசிய சொத்துகளாக்கக் கூடியதாக புதிய அரசாங்கமாக அமைய வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள்.
எனவே தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற புதிய பாராளுமன்றத்தை உண்டாக்கி அதன் மூலம் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை காண்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படாதவரை போராட்டங்கள் ஓயப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :