பொருளாதார நெருக்கடி நீங்க புனித ரமழானில் பிரார்த்திப்போம் !



நூருள் ஹுதா உமர்-
லங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் - இந்த ரமழான் நோன்பு கால கடமைகளை நிறைவேற்றும் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக என்று - முகா பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.

சங்கைமிகு ரமழானில் அனைத்து சங்கடங்களும் நீங்கிவிட பிரார்த்திப்போம் என்றும் யஹியாகான் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

நோன்பு என்பது சங்கைமிக்க புனித கடமை. பாவங்கள் அகன்று, ஒரு மனிதனை புனிதனாக்கும் சங்கைமிக்க மாதமே இந்த ரமழான்.

கடந்த இரு வருடங்களாக வந்த புனித நோன்பு காலத்தில் - கொரோனா எனும் கொடிய நோயால் பெரும் துயர் நிறைந்த - சொல்லொனா கஷ்டங்களை எமது நாடு அனுபவித்தது.
இன்னும் பல காரணங்களால் நாம் இம்சிக்கப்பட்டோம். இப்போது , பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி சிக்கித் தவிக்கின்றோம்.

கொடிய கொரோனா அகன்று சுபீட்சமான காலம் மலர நாம் இறைவனை என்றும் போல் பிரார்த்திப்போம்..எமது - அவ்வாறான பிரார்த்தனைகள் கூடிய விரைவில் அங்கீகரிக்கப்படும் மாதமே இந்த புனித ரமழான் மாதமாகும்.

எனவே - இப்புனித மாதத்தில் எம்மால் முடிந்தளவு வணக்க வழிபாடுகளிலும் நண்மையான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு ரமழான் மாதத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி - எமதும் நாட்டினதும் பொருளாதாரம் ஸ்திர தன்மையை அடைய பிரார்த்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :