ஏறாவூர் நகரசபையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் வெற்றிடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மீராசாகிப் அப்துல் கபூர், அப்துல் மஜீட் சப்றா ஆகியோர் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்
.ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சரும், ஏறாவூர் நகரசபையின் கௌரவ உறுப்பினருமான எம்.எஸா.சுபைர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் கௌரவ தவிசாளர் எம்.எஸ்.நழீம் அவர்களும் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம் ஹமீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் கௌரவ உறுப்பினருமாகிய #AM_மாஹிர்,
மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.எம்.அருஸ், உட்பட கட்சியின் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இச்சத்தியபிரமாண நிகழ்வில் மட்டக்களப்பு மாநாகரசபை உறுப்பினராக அப்துல்_லத்தீப் அவர்களும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினராக ஏ. றகுமா பீவி ஆகியோரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் எம்.எஸ்.சுபைர் அவர்கள் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
0 comments :
Post a Comment