அன்னமலை ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில் கல்வி பயின்று தரம் 6 க்கு செல்லும் மாணவர்களுக்கான விடுகை விழாவும், தரம் 01 மாணவர்களிற்கான வரவேற்பு விழாவும் நேற்று அதிபர் பொன்.பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் சம்மாந்துறை வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
பாடசாலையின் இணைப்பாளர் எஸ்.குணரெட்ண, அன்னமலை சமுக செயற்பாட்டாளர் தா.சிவகுமார் ,அன்னமலை வடபத்ரகாளி அம்மன் ஆலய தலைவர் எஸ்.சுரேந்திரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கான முதலாந்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுச்சின்னம் கற்றல் உபகரணமடங்கிய பக்கற் மாலை போன்ற சகல பொருட்களையும் புரவலர் சிவகுமார் தம்பதியர் வழங்கி வைத்தனர்.
விடுகை பெற்று செல்லும் மாணவர்களுக்கான கற்றலுபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment