கொழும்பு கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடந்த சனிக்கிழமை தனது கடைக்கு வருகை தந்த வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகளை இலவசமாக விநியோகித்துள்ளார்.
தனது கையிருப்பிலிருந்த சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மரக்கறிகள் நுகர்வோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த கடை உரிமையாளர், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கடையில் பணத்திற்கு காய்கறிகளை விற்கும் முன் வாடிக்கையாளர்களுக்கு இந்த இறுக்கமான கால கட்டத்தில் இலவச காய்கறிகளை வழங்க நினைத்தேன்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உந்துதலாக உள்ளதாகவும், மக்களுக்கு உதவக்கூடியவர்கள் இருந்தால், நிதி நெருக்கடியில் உள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment