கலாநிதி. அஸ்லம் இலங்கை திட்டமிடல் சேவையின் இரண்டாம் வகுப்பிற்கு பதவி உயர்த்தப்பட்டார்.



லங்கை திட்டமிடல்சேவையைச்சேர்ந்த கலாநிதிஏ.எல்.முகம்மட் அஸ்லம் இலங்கை திட்டமிடல் சேவையின் II ம் வகுப்பிற்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இவருக்கான பதவி உயர்வுக் கடிதத்தை அரசாங்க சேவை ஆணைக்குழு, பொது நிருவாக அமைச்சிற்கூடாக அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழக பொருளியல் துறையின் வரலாற்றில் முதலாம் வகுப்பு சிறப்பு பட்டம் பெற்ற இவர் திட்டமிடல் டிப்ளோமா, திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டப் பின்படிப்பு கல்வி டிப்ளோமா, தேசிய பட வரைஞர் சான்றிதழ் என்பவற்றை பெற்றவராவார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளியியலில் கலாநிதி பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவர் இலங்கை திட்டமிடல்சேவைக்கு 2008 ம் ஆண்டு திறந்த போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவராவர். தமண, அட்டாளைச்சேனை பிரதேச செயலகங்களிலும் அம்பாறை மாவட்டச் செயலகத்திலும் கடமையாற்றிய இவர் தற்போது சம்மாந்துறை பிரதேச செயலகத்தில்கடமை ஆற்றி வருகிறார்.

சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம், கல்முனை சாகிறாக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவரான இவர் சிறிது காலம் ஆசிரியராக பொத்துவில் அல்- அஸ்ரப் வித், சாய்ந்தமருது மல்ஹறுஸ் ஸம்ஸ் தேசிய
பாடசாலை ஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.

இவர் சாய்ந்தமருது ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் மர்ஹும்களான அல்ஹாஜ். எம் அகமட்லெப்பை,நூறுல் மஸாகிறாஆகியோ
ரின் கனிஸ்ட புதல்வராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :