காரைதீவில் களை கட்டிய சித்திரை புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா



காரைதீவு நிருபர் சகா-
சுபகிருது சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 39வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக நிலையமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய 24வது மாபெரும் கலாசார விளையாட்டு விழா சிறப்பாக நேற்று நடைபெற்றது.
காலை நிகழ்வான மரதன் ஓட்டமானது கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு காரைதீவு விளையாட்டு கழக காரியாலயத்தில் நிறைவுபெற்றது.

மாலையில் விபுலானந்த மைதானத்தில் தலைவர் வி.அருள்குமரன் தலைமையில் கலாசார விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தவிசாளர் கி.ஜெயசிறில் ஆலோசகர்களான செ.இராமகிருஸ்ணன் வே.இராஜேந்திரன் வே.த.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.


கல்வி சாதனையாளர்கள் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :