திருகோணமலை மாவட்டம் , மூதூர் அறபாநகர் கிராமத்தில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டு வெள்ளரிக்காய் செய்கையின் மூலம் சிறந்த விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 12 விவசாயிகளிடையே பரீட்சாத்தமாக மேற் கொள்ளப்பட்ட இச்செய்கையில் இரண்டு விவசாயிகள் அறுவடையை முதன் முதலில் மேற்கொண்டுள்ளனர்.
70 தொடக்கம் 75 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட இப்பயிர்ச் செய்கை மூலம் அதிக விளையச்சல் கிடைத்துள்ளது.
அறுவடை செய்யப்பட்ட வெள்ளிரிக்காய்க்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த சந்தை வாய்ப்புள்ளதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பரீட்சாத்த முயற்சியில் அரை ஏக்கர் காணியில் 1.5 அடிக்கு ஒரு நாற்று என்ற வீதத்தில் 3000 நாற்றுகள் நடப்பட்டன.
0 comments :
Post a Comment