புத்தளம் மாவட்டம் கற்பிட்டி பிரதேச செயலகப்பிரிவிற்குட்ட பிரதேசத்திற்கான கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய உடற்கல்வித்துறை ஆசிரியரும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி பழைய மாணவருமான எஸ்.ஐ.எம்.அம்ஜத் புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபரினால் நியமனம்.
விளையாட்டுத்துறை அமைச்சினால் நாடாளவிய ரீதியில் இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை பிரபல்யப்படுத்தி கிராமப்புறங்களிலுள்ள இளைஞர் யுவதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் புத்தளம் மாவட்டத்திற்கான கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களை தெரிவு செய்வதற்கான பரீட்சையும் நேர்முகத்தேர்வும் அண்மையில் புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவரான இவர் பாடசாலை காலங்களில் பாடசாலை மட்டம் , வலய மட்டம் , மாவட்ட மட்டம் , மாகாணமட்டம் மற்றும் தேசிய மட்டங்களில் குறுந்தூர ஓட்டம் , அஞ்சலோட்டம் , தடைதாண்டி ஓட்டம் என்பவற்றிலும் பெரு விளையாட்டுக்களான கிறிக்கட் , காற்பந்து , கரப்பந்தாட்டம் , கபடி போன்றவற்றிலும் பங்கேற்று தனது பாடசாலைக்கும் இப்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்தவராவார்.
மேற்படி பயிற்றுவிப்பாளருக்கான பரீட்சையில் கூடுதலான புள்ளிகளைப் பெற்றதுடன் நேர்முகப்பரீட்சையிலும் சித்தியடைந்து இவர் இப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment