அதற்கு தேவையான திருத்தங்களை தயாரிப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொறுப்பை ஏற்க முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும், நிதி அமைச்சர் ஒருவரை நியமித்துக்கொள்ள ஜனாதிபதிக்கு முடியாமல் போயிருக்கின்றது அதனால் தான் மக்கள் ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு தெரிவிக்கின்றனர்.
சிறுபான்மையினரை நோகடிக்கும் முடிவுகள் கடந்த காலத்தில் இடம்பெற்றன அதனால் மக்களின் போராட்டத்தை அநுர குமார மீது சுமத்துவதில் பயனில்லை.
நாங்கள் பொறுப்பை மீறி செயற்பட்டவாறு பெரும்பான்மையை காட்டுமாறு எங்களை கோருகின்றனர், அத்துடன் ஆளும் தரப்பிற்கு 69 இலட்சம் கிடைத்தது போன்று எதிரணிக்கும் 55 இலட்சம் வாக்கு கிடைத்தது.
முன்பு காபந்து அரசு குறித்தும் தேசிய அரசு பற்றியும் இடைக்கால அரசு பற்றியும் எமக்கு அனுபவம் இருக்கின்றது.
6 மாதத்துக்காவது இடைக்கால பொறிமுறை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு ஒருவாரத்துக்குள் அதனை நாங்கள் சமர்ப்பிக்க இருக்கின்றோம்.
என்றாலும் ஜனாதிபதி தொடர்ந்தும் இந்த பதவியில் இருக்கும் நிலையில் இதனை செய்ய முடியும் என நாங்கள் நினைக்கவில்லை.
மேலும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் எமது பிள்ளைகளும் கூட வீதியில் இறங்குகின்றனர். நாங்கள் தடுத்தபோதும் எனது மகளும் மருமகனும் கூட இறங்கினார்கள்.
இளைஞர்கள் மத்தியில் எதிர்காலம் பற்றி அச்சம் உள்ளது.
ஜனாதிபதி தனது பொறுப்பை மேற்கொள்ள வேண்டும். அவரை விலகுமாறு தான் மக்கள் கோருகின்றனர்.
அத்துடன் தற்பாதுள்ள நிலையில் நாட்டை நிர்வகிக்க அரசாங்கத்துக்கும் முடியாது, எதிர்க்கட்சிக்கும் முடியாது என்றால் கல்விமான்கள்,அறிஞர்களை உள்ளடக்கிய சபையொன்றை தற்காலிகமாக அமைப்போம்.அதற்கு தேவையான திருத்தங்களை தயாரிப்போம்.
அடுத்த தேர்தல் வரை வெளியிலுள்ள கற்றவர்களை உள்ளடக்கிய காபந்து அரசு ஓன்றை உருவாக்குவோம்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட நிதி அமைச்சர் ஒருவர் இல்லை என்றார்.
0 comments :
Post a Comment