ரவூப் ஹக்கீமின் பங்குபற்றலுடன் சாய்ந்தமருதில் இப்தார் நிகழ்வு!


முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் ஏற்பாட்டில் நேற்று (28) சாய்ந்தமருதில் மாபெரும் இப்தார் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் இல்லத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் அல் - ஹாஜ் ரவூப் ஹக்கீம்,தவிசாளர் அப்துல் மஜீத்,முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை,தவம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன் முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட போராளிகள் பலரும் சிறாஸின் தனிப்பட்ட ஆதரவாளர்கள் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் அல் - ஹாஜ் ரவூப் ஹக்கீம், நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அன்றாடம் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் இங்கு மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் எங்களில் சிலரும் ஏறிஇருப்பது ஆச்சரியத்தைத் தருவதாகவும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வுக்குத் தலைமை வகித்த முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், இன்றைய அரசியல் சூழ்நிலையில் இலங்கை முஸ்லிம்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் குறித்த செயற்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :