கண்ணீர் மல்க பரீட் அதிபரை ஊர்வலமாக அழைத்துச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம்!



எச்.எம்.எம்.பர்ஸான்-
37 வருட கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றுள்ள வாழைச்சேனை பரீட் அதிபருக்கு மகத்தான கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.


ஓய்வு பெற்றுச் செல்லும் இவருக்கு மாலை அணிவித்து, முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான பக்கீர் இசைக்கப்பட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் கண்ணீர் மல்க வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திலிருந்து அவரது வீடுவரை ஊர்வலாமாக அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் வெள்ளிக்கிழமை (1) இடம்பெற்றது.

இவர், வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் 13 வருடங்கள் அதிபராக சேவையாற்றி அப் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.
அத்துடன், அரசியல், சமூக சேவைகள், போன்றவற்றில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பிரதேசத்திற்கு தன்னாலான பங்களிப்பினை செய்துள்ளார்.

பரீட் அதிபரின் கல்விப் பணிக்காக அவரின் ஓய்வை முன்னிட்டு பாடசாலை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்த இந்த முன்மாதிரியான நிகழ்வு அனைவரினதும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள இவரது சேவையை கல்வியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூகமட்ட அமைப்பினர்கள், பள்ளிவாயல்கள் நிர்வாகத்தினர்கள் எனப்பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :