பேராசான் சோ.சந்திரசேகரன் தனது துறையான கல்வியியலுக்கு அப்பால் மலையக சமூகம் குறித்த பலதரப்பட்ட விடயங்களில் அக்கறையுடன் செயற்பட்டவர். இலங்கை இந்தியர் வரலாறு எனும் அவரது வரலாற்று நூல் இலங்கை வாழ் இந்திய வமசாவளியினரின் வருகையையும் வாழ்வையும் பதிவு செய்யும் முக்கியமான நூல். இது தவிர இன்னும் கல்வித்துறை சார்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். இலக்கிய ஈடுபாடு கொண்ட இவர் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டவர். ஆயுட்கால உறுப்பினரும் கூட. பல இலக்கிய நூல்களைக்கு முன்னுரை, அணிந்துரை எழுதி உள்ளார். அரசியல் கட்சி பேதங்கள் பாராது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி என எல்லாத்தரப்பினருக்கும் தனது அறிவை ஆலோசனையாக அவ்வப்போது பகிர்ந்து கொண்டவர். சிந்தனைக் குழாம் உறுப்பினராக இயங்கியவர். மலையகப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டு பல கட்டுரைகளை தர்க்க ரீதியாக எழுதியவர், கருத்துக்களை முன்வைத்தவர். சுவையான பேச்சாளர். அங்கதச் சுவையுடன் கல்வித்துறை மீதான சுய விமர்சனத்துடனும் அமையும் அவரது உரை எப்போதும் சபையைக் கவரும். எளிமையாகவும் இனிமையாகவும் எல்லோருடனும் பழகும் எல்லா சமூகத்தினருடனும் சகஜமான உறவைப் பேணி வந்தவர். இவர் போன்று ஒரு பேராசனை இனி மலையகம் காண்பதரிது. அன்னாருக்கு எமது அஞ்சலிகளைப் பதிவு செய்வதுடன் அவரது குடும்த்தினர் நண்பர்கள் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம்.
எளிமையை கிரீடமாக அணிந்திருந்தவர் எங்கள் பேராசான் சோ.சந்திரசேகரன்.-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகர் அஞ்சலி

0 comments :
Post a Comment