




ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசு, நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை பலத்தையும் இழக்கும் நெருக்கடியான கட்டத்தில் உள்ளது.
159 ஆசனங்களுடன் நாடாளுமன்றத்தில் பலமான நிலையில் இருந்த மொட்டு கட்சி வசம் தற்போது 116 ஆசனங்களே எஞ்சியுள்ளன. அதிலும் 11 பேர் சர்வக்கட்சி இடைக்கால அரசுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். 11 பேரும் அதிரடி அரசியல் முடிவை எடுப்பதற்கு தயார் நிலையில் இருப்பதால், ஆளுங்கட்சி வசம் தற்போது உறுதியாக 105 ஆசனங்களே உள்ளன.
சுயாதீன அணிகள் உட்பட எதிரணி பக்கம் 108 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆளுங்கட்சிமீது அதிருப்தி நிலையில் உள்ள 11 பேரையும் வளைத்துபோட்டு, எதிரணிகள் ஓரணியில் திரண்டால், ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரலாம்.
நாடாளுமன்றத்தில் கட்சிகளின் பலம் எப்படி உள்ளது?
பொதுத்தேர்தலில் போட்டியிட்ட மொட்டு கட்சிக்கு 17 போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. பங்காளிகளின் ஆதரவு கிடைத்தது. 20 ஐ ஆதரித்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேசக்கரம் நீட்டினர்.
இதன்படி -











அரசுக்கு ஆதரவாக (சபாநாயகர்தவிர) நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் இருந்தன.
நாடாளுமன்ற விஜயதாச ராஜபக்ச ஏற்கனவே ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள் என ஏப்ரல் 05 ஆம் திகதி 43 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் அருந்திக்க பெர்ணான்டோ, ரொஷான் ரணசிங்க, கயாஷான் நவனந்த ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது முடிவை மாற்றிக்கொண்டனர். ‘சுயாதீனம்’ இல்லை என அறிவித்தனர். அருந்திக்கவுக்கும், கயாஷானுக்கும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரளித்த 7 முஸ்லிம் எம்.பிக்களில் நால்வர் ( எச்.எம்.எம். ஹரீஸ், பைஸால் காசிம், எம்.எஸ்.தௌபீக் மற்றும் இஷாக் ரஹுமான்) அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சுயாதீன அணியில் இருந்த சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இருவர் (சாந்த பண்டார, சுரேன் ராகவன்) அரசுக்கு ஆதரவு தெரிவித்து, இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர்.

தமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில், அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டிலேயே டலஸ் அழகப்பெரும உள்ளார்.

இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 10 பேரில், மூவர் சுயாதீன அணிக்கு சென்றால்கூட அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துவிடும்.











( 11 கட்சிகள், இ.தொ.கா., அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ள முஸ்லிம் எம்.பிக்கள்)



0 comments :
Post a Comment