டொலர்கள் எல்லாம் ராஜபக்சே குடும்பத்தினரின் பக்கட்டுகளில் உள்ளது! திருக்கோவிலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச காட்டம் !



காரைதீவு நிருபர் சகா-
நாட்டில் டொலர்கள் இல்லை இல்லை என்கிறார்கள் . ஆனால் நான் சொல்கிறேன் நாட்டிலுள்ள டொலர்கள் எல்லாம் ராஜபக்சக்கள் பக்கட்டுகளில் இருக்கின்றது .
இவ்வாறு நேற்று முன்தினம் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

சஜித் பிரேமதாச அவர்களின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசத்துக்கான இணைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் ஏற்பாட்டிலே சுவாசம் வேலைத் திட்டத்தின் கீழ் திருக்கோயில் ஆதார வைத்தியசாலைக்கு 26 லட்சத்து 54ஆயிரம் ரூபாவுக்கான வைக்க உபகரணங்களும் பனங்காட்டு வைத்தியசாலைக்கு 21 லட்சத்து 34 ஆயிரம் ரூபாவுக்கான உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ந்து பேசுகையில்..
நாட்டில் லஞ்சம் ஊழல் திருட்டு களவு அதிகரித்திருக்கின்றது. இன்று நாடு அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. பொறுமை காத்த மக்கள் வீதிக்கு இறங்கி இருக்கின்றார்கள். எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டமும் கியூ வரிசையும். காலிமுகத்திடலில் இளைஞர்களும் யுவதிகளும் கடந்த பல நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எந்தவிதமான அரசியல் தலையீடு இன்றி அவர்கள் சுயமாக முன்வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
சுதந்திரமாக நாங்கள் வாழ வேண்டும் விஷம் போல் ஏறி உள்ள விலைவாசி குறைக்க வேண்டும் என்றெல்லாம் கூறி அவர்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

நிச்சயமாக எமது அரசாங்கம் அமையப் போகின்றது நான் ஜனாதிபதியாக வருவேன். எமது அரசில் இப்பொழுது இலஞ்சம் ஊழல் கொள்ளையிலே சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்போம்.
அவர்களிடம் உள்ள அனைத்து டொலர்களையும் பறிமுதல் செய்து மக்களுக்காக நாங்கள் முதலீடு செய்ய இருக்கிறோம்.

காலிமுகத்திடலில் கூடியுள்ள மக்கள் தங்களுக்காக அல்லது கட்சிக்காக அந்த ஆர்ப்பாட்டத்தை செய்யவில்லை. நாட்டிலுள்ள 2 கோடியே 22 லட்சம் மக்களுக்காக செய்கின்றார்கள்.
உண்மையிலே பாதுகாப்பு படையினர் போலீசார் மக்களுக்காக செயற்பட்டு வருகின்றார்கள் .இந்த வகையிலே அரச கூலிப்படையினர் ஆர்ப்பாட்டத்தை நசுக்குவதற்கு முற்படுவதாக நாங்கள் அறிகிறோம் .

படையினர் அரசகூலிப்படை அல்ல.அவர்கள் யாருக்கும் அடிபணிய மாட்டார்கள். மக்களை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை படையினருக்கும் பொலிசாருக்குகும் இருக்கிறது .எமது நாட்டு படையினரும் போலீசாரும் தரமான வர்கள். அவர்கள் எந்த ஒரு கட்டத்திலும் இந்த அரச கூலிப்படையாக மாற மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை .
இந்த வேளையிலே நாட்டிலே எதையெடுத்தாலும் பற்றாக்குறை. வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு. இதனை நிவர்த்தி செய்வதற்கு நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த பொழுதிலும் வெளிநாட்டு உதவிகள் பெற்று இந்த உதவிகளை வைத்தியசாலைகளுக்கு செய்து வருகிறோம்.

அதாவது மக்களது வாக்குகளை பெற்று வந்த அரசாங்கம் விமானங்களை கொள்வனவு செய்யவும் அதிவேகப் பாதைகளை நிருமாணிக்கவும் கோடிக்கணக்கில் நிதியை ஒதுக்கி வருகிறது ..

இன்றைய இந்த பொருளாதார முடக்க நிலையில் இது அவசியமா என கேட்கிறேன் .
அதிவேகப் பாதைக்கு நிதி ஒதுக்கினால் அதிவேகமாக கொள்ளை அடிக்கலாம் என்பதற்காகவே அவர்கள் இதனை செய்கின்றார்கள். இதை விட வேறு காரணம் இருக்க முடியாது .நாடும் நாட்டு மக்களும் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த விமானங்கள் அதிவேகப் பாதைகள் தேவையா.? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :