சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசேட தேவையுடையோர் களுக்கான மாதாந்த கொடுப்பனவு, விசேட தேவையுடையோருக்கான கல்விக் கொடுப்பனவு, மற்றும் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான கொடுப்பனவும் அடங்கலாக மொத்தமாக 17 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது சமூக பராமரிப்பு நிலையத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஸிக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்ர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக பராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment