எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் உழவுவேலைகள் ஆரம்பம்: செலவுகள் அதிகரிப்பு!



காரைதீவ சகா-
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான உழவுவேலைகள் ஆம்பமாகியுள்ளன.அதேவேளை அதற்கான செலவுகளும் பாரியஅளவில் அதிகரித்துள்ளன.

உழவு வேலைக்கென எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கமைவாக பிரத்தியேக கியுவில் வைத்து மட்டுப்படுத்தப்பட்டஅளவில் டீசல் நிரப்பப்படுகின்றன.
அதேவேளை உழவு வேலைகளுக்கான கூலிகளும் பரவலாக அதிகரித்துள்ளன.

ஒரு ஏக்கர் உழவுவதற்கு உழவு இயந்திரத்திற்கான கூலி 6000ருபாவிலிருந்து 12000ருபாவாக அதிகரித்துள்ளது.1லீற்றர் டீசல் 340 ருபாவாக அதிகரித்துள்ளமையே இதற்குக்காரணம்.பல உழவு இயந்திரகாரர்கள் டீசல் பிரச்சினையால் உழவமுடியாது என்கிறார்கள்.அதனால் இன்னும் உழவமுடியாது பல விவசாயிகள் திண்டாட்டத்திலுள்ளனர்.
மேலும் விதைப்பதற்கான கூலி 1500 ருபாவிலிருந்து 2000 ருபாவாக அதிகரித்துள்ள அதேவேளை வரம்பு கட்டுவதற்கான கூலி 2000 ருபாவிலிருந்து 2500 ருபாவாக அதிகரித்துள்ளது.
1புசல் விதைநெல்லுக்கு 1000ருபாவால் கூடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த தடவையைப்போல இரசாயனப்பசளை இம்முறையும் கிடைக்கவில்லை. எனினும் கடந்த தடவை கள்ளச்சந்தையில் 1மூடை யூறியா 35ஆயிரம் ருபாவுக்கு விற்கப்பட்டது. யூறியா இட்டு நெற்செய்கையீலீடுபட்டவர்களுக்கு விளைச்சல் அதிகமாகவிருந்தது.கூடவே நெல்லின்விலையும் அதிகரித்தமையினால் கூடிய இலாபம் பெற்றனர். ஆனால் யூறியா இம்முறை 50ஆயிரம் ருபா வரை செல்கிறது. அதற்கும் யூறியா இல்லையென பழக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :