கோல்பேஸ் ஐ சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டது.



கொழும்பு , கோட்டையில் கோல்பேஸ் திடலுக்கு அருகாமையில் உள்ள பல வீதிகள் பொலிசாரினால் சற்று முன்னர் மூடப்பட்டுள்ளது.
இரும்பு குழாய்கள் கொண்டு பாதையின் குறுக்காக வேலி போன்று பொருத்தப்பட்டு, பாதைகள் மறிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக அவற்றை கடந்து செல்வதாயின் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் அவற்றின் உள்ளே குனிந்து புகுந்து நிமிர்ந்து சிரமப்பட வேண்டியுள்ளது
கோல்பேஸ் திடலை நோக்கி நாளாந்தம் பொதுமக்கள் ஒன்று திரண்டு வருவதைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன் படி தற்போதைக்கு என்.எஸ்.ஏ. சுற்றுவட்டாரம் தொடக்கம் சைத்திய வீதி, என்.எஸ்.ஏ. சுற்றுவட்டாரம் தொடக்கம் ஜனாதிபதி மாவத்தை , செரமிக் சந்தி தொடக்கம் யோர்க் மாவத்தை, ஜீ.ஓ.எச் சந்தி வரை, வங்கி வீதி, செரமிக் சந்தி தொடக்கம் என்.எஸ்.ஏ சுற்றுவட்டாரம் வரை லோட்டஸ் மாவத்தை, கீழ் செதம வீதி, ஜீ.ஓ.எச் சந்தி தொடக்கம் பிரதான வீதி மற்றும் லேடன் பஸ்தியன் மாவத்தை போன்ற வீதிகள் நிரந்தரமான முறையில் இரும்பு குழாய்கள் கொண்டு வேலியமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :