கல்முனை கிரீன்பீல்ட் றோயல் வித்தியாலய "புலமைத்தளிர்கள்" கௌரவிப்பு நிகழ்வு !




நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்விவலய கல்முனை கிரீன்பீல்ட் கமு/கமு/ றோயல் வித்தியாலயத்திலிருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களையும் அவர்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் "புலமைத்தளிர்கள்" கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எச்.எம். அன்ஸார் தலைமையில் பாடசாலை திறந்த அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் சிறப்பு அதிதிகளாக அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். எப். ரஹ்மான், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி வீ.எம். ஸம்ஸம், கல்முனை கல்விவலய சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு வளவாளர் ஹபீழ், ஆசிரிய ஆலோசகர் ஏ. றபீக், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா, கல்முனை கிரீன்பீல்ட் கூட்டு ஆதன முகாமைத்துவ சபை தலைவர் ஏ. கலீலுர் ரஹ்மான், கல்முனை கிரீன்பீல்ட் பள்ளிவாசல் நிர்வாகிகள், பாடசாலை பிரதியதிபர் எம்.எம். இப்ராஹிம் அடங்களாக ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சபையினர், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த "புலமைத்தளிர்கள்" கௌரவிப்பு நிகழ்வில் கடந்த 2016,2017,2018,2019,2020,2021 ஆம் ஆண்டுகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் மாகாண மட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :