அம்பாறை மாவட்ட மக்களுக்கு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ பொதி வழங்கும் செயற்றிட்டம் கல்முனையன்ஸ் போரமினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கான பேரீச்சம்பழ பொதி வழங்கும் நிகழ்வு அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா அமைப்பினரின் ஏற்பாட்டில் அமைப்பின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில் இன்று நடைபெற்றது.
கல்முனையன்ஸ் போரத்தின் வேண்டுகோளுக்கமைய 6000 தொன் பேரிச்சம்பழ தொகுதியினை பெஸ்ட் புட் மார்க்கெடிங் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தினர் நன்கொடையாக வழங்கியிருந்தனர். அதனை அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் அமைப்புக்களூடாக இணங்கானப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதன் ஒரு அங்கமாகவே இந்நிகழ்வு மாளிகைக்காட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாளிகைக்காடு கிழக்கு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா அமைப்பின் பிரதித்தலைவர் பீ.எம். நாஸிக், பிரதம உதவி செயலாளர் மௌலவி என். சப்னி அஹமட், கலாச்சார விவகார தேசிய இணைப்பாளர் கலைஞர் என்.எம். அலிக்கான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment