.Srilanka Olympiad mathematics Foundation மற்றும் Srilanka Olympiad Education Centre ஆகியன இணைந்து ஒழுங்கு செய்துள்ள இலங்கை ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் பங்குபற்றுவதன் மூலம் பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை மட்ட கணிதக் கல்விக்கான ஆற்றல் மற்றும் கணித சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள உதவும்.
இதில் அவர்களது சட்டகத்துக்கு வெளியேயான சிந்தனை, தர்க்க சிந்தனை,தரவுகளை பகுப்பாய்வுசெய்தல் அவற்றிலிருந்து முடிவுகளை மேற்கொள்ளும் ஆற்றல் என்பவற்றை வளர்த்துக்கொள்ள முடியும்.
எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நோர்வே நாட்டின் ஒஸ்லோ மாநகரில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் இதன் மூலம் கிட்டவுள்ளது..
இப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் www.slmathsolympiad.org என்ற இணையத்தினூடாக தமது விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
விபரங்களுக்கு Hotline 0764553217 என்ற கைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக தேசிய ரீதியில் பல பாடசாலை மாணவர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச ரீதியாக பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment