காலிமுகத்திடல் போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்காதீர்கள் – சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிகை



க்களின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
எனவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

காலி முகத்திடலுக்கு அருகாமையில் குவிக்கப்பட்ட பல பொலிஸ் வாகனங்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் அகற்றப்படவில்லை என அச்சங்கம் கூறியுள்ளது.

இந்த நாட்டு மக்களின் அமைதியான போராட்டம் எதுவாக இருந்தாலும், அதனை எந்த வகையிலும் சீர்குலைக்கும் முயற்சியை கண்டிப்பதாக கூறியுள்ளது.

மேலும் அத்தகைய முயற்சி நாடு, ஜனநாயகம், அதன் பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :