ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவின் கீழ் தேசிய "கமசமக பிலிசந்தர" வேலைத்திட்டத்தின் கீழ் முதற்தொகுதியாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.சி.எம். ரஷ்ஷான் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
"கமசமக பிலிசந்தர" வேலைத்திட்டத்தின் கீழ் இறக்காமம் பிரதேச செயலக 12 பிரிவுகளிலும் குறைந்தது 05 வேலைத்திட்டங்கள் என்ற அடிப்படையில் 84 வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.வரவு செலவுத்திட்டம் 2022 க்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் விரைவாக மக்களுக்கு சென்றடையும் வகையில் கிராம மட்ட பிராந்திய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற "கிராமத்துடன் உரையாடல்" கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி கருத்திட்ட முன்மொழிவுகளை செயற்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் என்பற்றைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களினூடாக முழு வேலைத்திட்டத்தையும் முன்னுரிமை அடிப்படையில் வேலைத்திட்டமாக செயற்படுத்தப்படுகின்றது.
வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், கணக்காளர் றிம்ஷியா அர்சாட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், திட்டமிடல் பிரிவு சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநயக்கவின் இணைப்பாளர் ஏ.றிஸ்வான் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment