கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தில் கணக்காளராக கடமையாற்றிவிட்டு யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் என்.பாலநந்தனின் சேவைகளை பாராட்டி கெளரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி சாமஸ்ரீ தேசகீர்த்தி (திருமதி) இ.ஸ்ரீதர் தலைமையில் மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்ற இந்த பிரியாவிடை நிகழ்வுக்கு கல்முனை பிராந்திய ஆயுள்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல், திருகோணமலை பிராந்திய ஆயுள்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளர் வைத்தியர் எஸ்.சிவச்செல்வன், திருக்கோவில் கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் ஐ.எல்.அப்துல் ஹை ஆகியோர் கலந்துகொண்டர்.
மேலும், சுதேச மருத்துவ திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தர் (திருமதி) என்.நவேந்திர ராஜா மற்றும் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு அவரின் சேவைகளைப் பாராட்டி உரையாற்றினர்.
இதன்போது மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி சாமஸ்ரீ தேசகீர்த்தி (திருமதி) இ.ஸ்ரீதரினால் ஞாபகச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்ட அதேவேளை கல்முனை பிராந்திய ஆயுள்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபிலினாலும் ஞாபகச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment