முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசேட அதிரடிப்படையினர் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைய திங்கட்கிழமை (25)அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை பெரிய நீலாவணை கல்முனை சம்மாந்துறை சவளக்கடை மத்திய முகாம் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு ரோந்து நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் ஒரு கட்டமாக திடீர் சோதனைகளை விசேட அதிரடிப்பழ்யினர் முப்படையினர் உள்ளிட்ட பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
இத் திடீர் சோதனையில் சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு ஆலோசனைகள் இஎச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment