சமகால நெருக்கடிக்கு மத்தியிலும் சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அண்ணமலை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் நேற்று இடம்பெற்றது.
முறைப்படி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவது போன்று தேர்தல் சாவடியில் உத்தியோகத்தர் இருக்கும் வண்ணம் இந்தத் தேர்தல் நடைபெற்றது.
கல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக நடைபெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலில் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலராக பிரதி அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் கடமையாற்றினார். தேர்தல் ஆணையாளராக அதிபர் எஸ் பாலசிங்கன் கடமையாற்றினார்.
அங்கு முறையான தேர்தல் முறைப்படி மாணவர் மன்ற தேர்தல் நடந்தது. தெரிவு இடம்பெற்றது.
0 comments :
Post a Comment