கிழக்கு மாகாணத்தில் அக்குபஞ்சர் சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதற்கான செயற்திட்டம்



பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாணத்தில் அக்குபஞ்சர் சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதற்கான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் Ceragem Lanka (Pvt) Ltd நிறுவனமும், பொரளை ஆயுள்வேத போதனா வைத்தியசாலையின் கொரியன் அக்குபஞ்சர் பிரிவும் இணைந்து குறித்த சிகிச்சை தொடர்பான விளக்கப் பயிற்சிகளை மாகாணத்திலுள்ள ஆயுள்வேத வைத்தியர்களுக்கு முன்னெடுத்து வருகின்றது.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் தலைமையில் நேற்று முன்தினம் கிழக்கு மாகாண முதலமைச்சின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த அக்குபஞ்சர் சிகிச்சை விளக்கப் பயிற்சிகளை பொரளை ஆயுள்வேத போதனா வைத்தியசாலையின் கொரியன் அக்குபஞ்சர் பிரிவு வைத்தியர், Ceragem Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் தலைவர் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது. இதில் திருகோணமலை பிராந்திய ஆயுள்வேத வைத்தியசாலை, பஞ்சகர்ம வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பலர் பங்குபற்றி குறித்த வைத்திய சிகிச்சை தொடர்பான விளக்கப் பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர்.
பயிற்சி நிறைவின்போது குறித்த நிறுவனத்தின தலைவரினால் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளரிடம் Massage bed, Slim belt போன்றவற்றை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :