றிஸ்லி முஸ்தபா கல்வி மற்றும் சமூக நல உதவித் திட்ட அமைப்பின் பங்களிப்புடன் மாயோன் ஸ்டார் லைப் அமையத்துடன் இணைந்து சம்மாந்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறையில் இன்று (26)இடம்பெற்றது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்குள் மத்தியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பொது மக்கள் எதிர்வரும் நோன்புப் பெருநாளை சிறப்பாக கொண்டாடும் முகமாக இவ் உலர் உணவுப் பொதிகள் மயோன் குரூப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபாவினால் இவ் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைக்கப்பட்டது .
இன் நிகழ்வில் மயோன் ஸ்டார் லைப் அமைப்பின் தலைவர் எம்.எம்.ரபீக், அமைப்பின் பெண்கள் பிரிவு தலைவி எம்.எம்.பாயிஸா உட்பட அமைப்பின் சம்மாந்துறை பொறுப்பாளர்களான எ.எம்.பாரிஸ், ஷபி ஸையித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் றிஸ்லி முஸ்தபா
கல்வி மற்றும் சமூக நல அமைப்பின் பங்களிப்புடன் பல்வேறு சமூக நல உதவி வேலைத் திட்டங்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment