வாழைச்சேனை ஹைராத் வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் மாணவர் வெளியேற்று விழாவும் பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் யூ.எல்.அஹமட் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டமாவடி கோட்ட கல்வி பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் ஜே.தாஜின்னிஸா, ஓய்வு பெற்ற அதிபர் ஏ.ஜி.பிர்தௌஸ், பாடசாலை அபிவிருத்தி சங்க முன்னாள் செயலாளர் எம்.இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது 2020 மற்றும் 2021ம் ஆண்டு தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலையில் தரம் ஐந்துவரை கற்று தரம் ஆறுக்கு வேறு பாடசாலைக்கு செல்லவுள்ள மாணவர்களும் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment