ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கௌரவிப்பும் இப்தார் நிகழ்வும்



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
வாழைச்சேனை அந் நூர் தேசியபாடசாலை 2002ம் ஆண்டு ஓ.எல். நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் தங்களுக்கு கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இப்தார் நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை (15.04.2022) இடம் பெற்றது.

2002ம் ஆண்டு ஓ.எல். நண்பர்கள் வட்டத்தின் தலைவர் எம்.எச்.ஆசிக் தலைமையில் அந் நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் அவர்களுக்கு கற்பித்து ஓய்வு பெற்றுள்ள ஆறு அதிபர் ஆசிரியர்கள் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இப்தார் நிகழ்வும் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் 2002ம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரனதர வகுப்புக்கு கற்பித்த ஆசிரியர்கள் அதிதிகளாக கலந்து சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.
வாழைச்சேனை அந் நூர் தேசியபாடசாலையில் 2002ம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரனதர பரீட்சை எழுதிய இளைஞர்கள் ஒன்றிணைந்து பிரதேச கல்வி முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்காற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :