நாடு எதிர்கொண்டுள்ள துர்ப்பாக்கிய நிலைக்கு விரைவான தீர்வு எட்டப்படவேண்டும் என்றும், நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக கல்விசார் கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் நிவர்திக்கப்படவேண்டும் என்பனபோன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இன்று 28.04.2022 இல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். தங்களதும் நாடு முழுவதும் விசேடமாக ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் கோரிக்கிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர் சங்க தலைவர் ஆகியோர்
நாடு மிக மோசமான பொருளாதார நிலையைச் சந்தித்துள்ளதாகவும் தற்போதைய காலகட்டத்தில் இதற்கான உரிய தீர்வுகளை எட்ட அரசு விரைந்து செயற்பட வேண்டுமெனவும் அரசை வலியுறுத்தும் விதத்தில் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
பொருட்களின் விலையேற்றம் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக் குறியாகி மக்கள் வீதிக்கு இறங்கி அரசிற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை, மேலும் நாட்டின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மக்கள் நாளுக்கு நாள் சொல்வொணார்த் துயரங்களை அனுபவித்து வருகின்றமை, அதிகரித்த வாழ்க்கைச் செலவு காரணமாக சாதாரண மக்கள் மாத்திரமன்றி பல்கலைக்கழகம் உட்பட ஏனைய அரச மற்றும் தனியார் தொழிற்துறையில் பணிபுரிவோரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு அமையவும் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் தீர்மானத்திற்கிணங்கவும் குறித்த பணிபகிஷ்கரிப் போராட்டம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment