ஒற்றுமை எனும் கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள் என அழ்ழாஹ் கூறுவதன் படிப்பினையை நாம் உணர்ந்து செயற்படுவது இக்காலத்திற்கு பொருத்தமானதாக அமையும் என்று மெளலவி றஹ்மதுல்லாஹ் (ஸஹ்வி) கூறினார்.
ஸஹ்றியன்ஸ் 93/96 அமைப்பு நண்பர்களின் வருடாந்த இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் (14) மாலை இடம்பெற்றது.
இவ்விசேட இப்தார் நிகழ்வின் நிகழ்ச்சிகளை இலங்கை வானொலி பிறை எப்.எம். சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நெளபீல் தொகுத்து வழங்க, இங்கு விசேட மார்க்கச் சொற்பொழிவினை மெளலவி றஹ்மதுல்லாஹ் ஸஹ்வி ஒற்றுமை தொடர்பாக சிறப்புமிக்க உரை நிகழ்த்தினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது,
இரண்டு விடயங்களின் ஊடாக மனிதனுக்கு ஈருலக வெற்றியும் கிடைக்கின்றது.ஒன்று தக்வா என்கின்ற இறையச்சம் இரண்டாவது ஒற்றுமை என்பதாகும்.
தக்வா என்கின்ற இறையச்சத்தை நாம் நோக்கும்போது, இந்த நோன்பை நோற்பதன் ஊடாக நீங்களெல்லாம் தக்வா தாரிகளாக ஆகிவிடலாம் என்று அல்லாஹ் குறிப்பிட வில்லை. மாறாக நீங்களெல்லாம் சிலவேளை தக்வாதாரிகளாக மாறிவிடலாம் என்பதற்காகவே அல்லாஹுதஆலா இந்த நோன்பை கடமையாக்கியதாக குறிப்பிடுகின்றான்.
சிலருடைய நோன்பு அழ்ழாஹ்வின் விருப்பத்திற்குரியதாக இருக்காது. ஏனெனில், பொதுவாக மனித வாழ்க்கையில் இவ்வுலகத்திலும் சரி மறுமையிலும் சரி வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் "தக்வா" முக்கியமாக இருக்கின்றது.
இந்த ரமழானை தந்துவிட்டு அல்லாஹ் எம்மிடம் எதிர்பார்ப்பதும் தக்வாவைத்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய ரமழானுடைய காலம் முழுவதுமாக சரியாக பயன்படுத்தப்பட்டால் மாத்திரமே நாங்கள் தக்வாதாரிகளாக மாற முடியும். வெறுமனே நோன்பு நோற்பதால் மட்டும் நாங்கள் தக்வாதாரிகளாக மாறிவிட முடியாது.
அடுத்த விடயம் ஒற்றுமை பற்றி கூறும் போது, எங்களுக்கு மத்தியில் இருக்கும் ஒற்றுமை ஐக்கியத்தை அழ்ழாஹ் கூறுகின்றான். மார்க்கம் என்கின்ற கையிற்றை பற்றிப் பிடித்துக் கொண்டு ஒற்றுமையாக இருந்து கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள் என்று அழ்ழாஹ் கூறுகின்றான்.
எனவேதான் நீங்கள் ஒன்றாகப் படித்தவர்கள் ஒன்று சேர்ந்து இவ்வாறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது மிகவும் சிறந்தது. முக்கியமாக நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் ஒற்றுமையாக நடந்து கொள்ள வேண்டும். கருத்து முரண்பாடுகள் வருகின்ற போது அதனை கலந்தாலோசித்து விட்டுக் கொடுப்புகளுடன் செயற்பட்டால் அது சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

0 comments :
Post a Comment