இலங்கையில்,அட்டாளைச்சேனையில் வெற்றிகரமாக நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியும், மாபெரும் பொதுக் கூட்டமும்



லங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாகவும்,அரசாங்கத்தின் இனவாதச் செயற்பாடுளின் விளைவாகவும் மக்களுக்கு நேர்ந்துள்ள அவலங்களின் உணர்வலைகளை வெளிப்படுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும், உடனடியாக இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு வழங்குமாறு அரசை வற்புறுத்தியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் மக்கள் பேரணியும், பொதுக் கூட்டமும் வெள்ளிக்கிழமை(1)) மாலை,கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

தென்கிழக்கிலங்கையின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் பெருமளவிலான இளைஞர்கள், பொது மக்களின் பங்குபற்றுதலுடன் ,
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

தென்கிழக்கின், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் மீனோடைக்கட்டு பிரதேசத்தில் ஒன்று சேர்ந்து அங்கிருந்து அட்டாளைச்சேனை பிரதான வீதிவரை இடம்பெற்ற பேரணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் இறுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆவேசமான நீண்ட உரையொன்றையாற்றி, அரசின் பிற்போக்குத்தனமான நிருவாக செயற்பாடுகளால் நாடு வங்குரோத்து நிலையைடைந்து மக்களைச் சொல்லொணாப் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளதைச் சுட்டிக்காட்டி கடும் விசனம் தெரிவித்தார்.
அரசுக்கு எதிரான மற்றும் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்தும் கோஷங்களைப் பேரணியில் கலந்து கொண்டோர் வழி நெடுகிலும்,பொதுக் கூட்டத்திலும் முழங்கினர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கமும் உரையாற்றினார்.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ,கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட கட்சிக்கிளை முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள்,பொதுமக்கள் பலரும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :