விபுல விண்மணிகளின் விடுகை விழா


காரைதீவு நிருபர் சகா-
காரைதீவு விபுலானந்த மொன்டிசேரி முன்பள்ளிப் பாடசாலையின் 24ஆவது வருடாந்த விபுல விண்மணிகளின் விடுகைவிழா பாடசாலையின் பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இ.கி.மி.பெண்கள் பாடசாலையில் நேற்றுமுன்தினம் (9) நடைபெற்றது.

அன்புகூர் அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.

ஆளுமைசார் அதிதிகளாக காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ,பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன், பொலநறுவை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் சிவசுந்தரம் சசிகரன் ,சிரேஸ்ட விவசாய போதனாசிரியர் இராஜநாயகம் விஜயராகவன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.

மொன்டிசோரியில் பயின்று தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற ஆ.கபிஷேக், ர.ஷஸ்விகா,ப.கிருத்திகன் ,ஜெ.ஆரபி, ச.குகேஸ்,அ.அர்ச்சிகாயினி ,ஹ.சிமேஹரினி ,சு.மேனுஜா, பு.ஜஷ்விகள் ,ரகு.தசாப்தனா, ச.மேனிஷா ,கி.கவின்யா, ஆ.கேதுஷன் ,சு.தரிஷ்ணவி ,சி.நிதஸ்கா, ரு.வர்ஜனா, ச.பேமரெட்சன் ஆகிய 17 புலமையாளர்கள் தங்கப்பதக்கம் நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

விடுகைபெறும் மாணவர்களான பி.மதுபாஷினி, மோ.அபிஸ்னா ,ர.மினிஸ்கா ,வி.தேஜஸ்விகா ,ஜெ.வேணுக்ஷா, பி.கரேஸ்னா ,கி.ஸங்கீர்த்தனா ,கு.கிருத்தியன் ,ந.டினுக்ஷன், கீ.அகீஷ் ஆகியோர் பரிசுகள் வழங்கி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சிறுவர்சிறுமியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மேடையேறின. பெற்றோர் சார்பில் கேதீஸ், ரஜி தலைமையிலான குழுவினர் சிறப்பாகச்செயற்பட்டனர்.ஆசிரியைகளான ஜெயநிலாந்தினி ,ரம்யா ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :