கல்முனையில் பிரதேச நல்லிணக்க மன்றங்கள் ஒன்றிணைந்து நடாத்திய இப்தார் நிகழ்வு !



எம்.என்.எம்.அப்ராஸ்,றாசிக் நபாயிஸ்-
மாதானமும் சமூகப்பணியும் அமைப்பின் அனுசரணையில் இயங்கும் அம்பாரை மாவட்ட பிரதேச நல்லிணக்க மன்றங்கள் ஒன்றிணைந்து இஸ்லாமியர்களின் புனித நோன்பினை முன்னிட்டு சகல இனத்தவரையும் ஒன்றினைத்து நோன்பு திறக்கும் (இப்தார் நிகழ்வு) கல்முனையில் உள்ள தனியார் மண்டபமொன்றில் நேற்று(27) பிற்பகல் நடைபெற்றது.

பௌத்தம்,இந்து,இஸ்லாமிய,கத்தோலிக்க ஆகிய
பல்லின சமூகத்தினர் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர் .

அம்பாரை மாவட்ட நல்லிணக்க மன்ற மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல்.அஸீஸ் கல்முனை நல்லிணக்கமன்ற இணைப்பாளர் வீ.தங்கவேல் ஆகியோரின் இணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள்,அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்,கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த புத்திக,கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்சின் பக்கீர் சமாதனமும் சமூகப்பணி நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் டி.தயாபரன்,
சமாதானமும் சமூக பணி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் டி.இராஜேந்திரன் உட்பட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்கள்,மாவட்ட நல்லிணக்க குழு இணைப்பாளர்கள்,பிரதேச நல்லிணக்க மன்ற இணைப்பாளர்கள்,கல்முனை,கல்முனைவடக்கு, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு,திருக்கோவில்,பொத்துவில்,தமன,லகுகல,அம்பாரை ஆகிய பிரதேச செயலக பிரிவில் உள்ள நல்லிணக்க குழு உறுப்பினர்கள்,பிரதேச நல்லிணக்க குழுவின் இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இனங்களிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் ஏற்ப்பாடு செய்யப்பட்டதாக பல்லின சமூகத்தினர் கலந்து கொண்ட நோன்பு திறக்கும் (இப்தார் நிகழ்வில்) சமாதனமும் சமூகப்பணி நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் டி.தயாபரன் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

இதேவேளை இந் நிகழ்வின் ஆரம்பமாக அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழு உறுப்பினர்கள் கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள பௌத்தம்,இந்து,
இஸ்லாமிய,கத்தோலிக்க ஆகிய நான்கு மதஸ்தலங்களுக்கும் நல்லிணக்க
விஜயம் மேற்க்கொண்டனர்.

இதனடிப்படையில் ஆரம்பமாக கல்முனை இருதய நாதர் தேவாலயம்,பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயம்,கல்முனை கடற்கரை பள்ளிவாசல்,கல்முனை சுபத்ராராமய விகாரைக்கு விஜயம் இடம்பெற்றது .

குறித்த நான்கு மத ஸ்தலங்களுக்கு நல்லிணக்க குழு உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டதுடன் மத ஸ்தலங்களில் இடம்பெறும் சமய விடயங்கள் பற்றி இதன் போது மத போதகர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

நான்கு மதஸ்தலங்கள் விஜயத்தின் மூலம் ஒவ்வொரு மதத்தினரின் சமய நடவடிக்கைகள் பற்றிய நல்லிணக்க குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் அறிந்து கொள்ளக் கூடியதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தமை இன்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :