மொரவெவா வைத்தியசாலையில் சர்வமத வழிபாட்டுத்தலங்கள்



லக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, மனிதனின் ஆரோக்கியம் என்பது நோய் நிலைமையற்ற தன்மை மட்டுமின்றி, முழுமையான உடல், மன, சமூக மற்றும் ஆன்மீக நல்வாழ்வின் நிலை என்பதாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு தமது நோயாளர்களின் மனித ஆரோக்கியத்தின் ஒரு அங்கமான மத நம்பிக்கைகளுக்கும் மற்றும் ஆன்மீக விழுமியங்களுக்கும் மதிப்பளித்து, மொரவெவா ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் சங்கத்தினர் உள்ளூர் சமூகத்துடன் இணைந்து சனிக்கிழமை (23/04/2022) மருத்துவமனை வளாகத்தில் நான்கு மதத்தினருக்குமான சர்வ மத வழிபாட்டுத் தலங்களை அங்குரார்ப்பணம் செய்தனர். இந்நிகழ்வானது மொரவெவா வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி லக்மாலி ஆனந்த அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மொரவெவா ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையமானது திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் நிர்வாகத்திற்குள் செயல்படும் ஒரு வைத்தியசாலையாகும்.

இவ்வங்குரார்ப்பண நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், வைத்தியசாலை நலன் விரும்பிகள் சங்க உறுப்பினர்கள், மொறவெவ பிரதேச சபையின் தவிசாளர் - திரு. ஜெகத் வீரகொட, மொறவெவ அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், அயல் வைத்தியசாலைகளின் ஊழியர்கள், சமூக சங்கங்களின் பிரதிநிதிகள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்த செயற்திட்டமானது இவ்வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்புவைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் ஞானகுணாளன் போல் ரொஷான் அவர்களின் வழிகாட்டலின் கீழ் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் வைத்தியசாலை நலன் விரும்பிகள் சங்கத்தினூடாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த சர்வ மத வழிபாட்டுத் தலங்களுக்கான பங்களிப்பு முற்று முழுதாக வைத்தியசாலை சமூகம், நலன் விரும்பிகள் மற்றும் ஊழியர்களினால் பொறுப்பேற்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சர்வ மத வழிபாட்டுத்தலங்கள் மொரவெவா போன்ற ஒரு சிறிய கிராமிய வைத்தியசாலையில் நிறுவப்பட்டது வரலாற்றில் காண்பதற்கரிய விடயமாகும். மொரவெவா வைத்தியசாலையின் இந்த சர்வ மத வழிபாட்டுத்தலங்கள் உள்ளூர் மக்களின் மத நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு முயற்சியுமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :