இந்துக்களின் புனித தினமான சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (16) சனிக்கிழமை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் விஷேட பூசை மற்றும் அன்னதானம் இடம் பெறவுள்ளது.
சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சித்திர குப்தர் நாயனார் சரிதம் பாட ஏற்பாடு செய்ய பட்டுள்ளது என ஆலய தலைவர் கி.ஜெயசிறில் தெரிவித்தார்.
காரைதீவை சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் சா.கந்தசாமி தலைமையிலான குழுவினர் சரிதம் படிக்க உள்ளனர். 12 மணிக்கு சித்ரா பௌர்ணமி விஷேட பூசை நடைபெறும்.
தொடர்ந்து அம்மன் அன்னதான மண்டபத்தில் மாபெரும் அன்னதான வைபவம் நடைபெறும். மாலையில் 4 மணியளவில் மண்டலாபிஷேக பூஜை இடம்பெறும்.
0 comments :
Post a Comment