அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினை தொடர்ந்து மாவடிப்பள்ளி ஆற்றை அண்டிய பிரதேசம் , வயல் பிரதேசம் மற்றும் சாய்ந்தமருது கரைவாகு வட்டை பிரதேசம் ஆகியவற்றில் பகலிலும் இரவிலும் முதலைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.
ஆறு , குளம் , குட்டைகளில் வசித்து வந்த முதலைகள் வெள்ளநீர் காரணமாக அந்த நீரோட்டத்தின் காரணமாக மேற்படி பிரதேசங்களில் சர்வசாதாரணமாக உலவித் திரிகின்றன. இவை ஊருக்குள் காணப்படும் மறைவான இடங்களில் பகல்வேளையில் தங்கியிருந்து இரவு வேளைகளில் கோழி மற்றும் ஆடுகளை வேட்டையாடி வருகின்றன. இதனால் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் பெரும் நஸ்டத்தினை எதிர்கொண்டு வருவதோடு பெண்களும் , சிறுவர்களும் , முதியோர்களும் பெரும் அச்சத்துடனேயே இரவு வேளையை கழிக்க வேண்டியும் உள்ளது.
0 comments :
Post a Comment