அந்த இரங்கள் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:-அமரர் ஊடகவியலாளர் பாக்கியராசா மோகனதாஸ்;; இளம் வயதிலேயே கலை.இலக்கிய மற்றும் ஊடகத்துறை துறையில் மிகவும் ஆர்வமாகச் செயற்பட்டவர்.கட்டுரை.நேர்காணல் என நூற்றுக்கணக்கான படைப்புக்களைத்தந்தவர்.
எல்லோருடனும் மிகவும் அன்பாகவும்,பண்பாகவும்,மரியாதையுடனும் பழகும் தன்மை கொண்டவர்.இவரது படைப்புக்கள் மிகவும் ஆழமான அடையாளங்களைக் கொண்டவையாகும்.இளம் வயதிலேயே நூற்குக்கணக்கான படைப்புக்களைத் தந்தவர்.இவரது கட்டுரைகளில் ஆழமான கருத்துக்கள் பொதிந்திருக்கும்.
இலங்கையில் வெளிவருகின்ற அனைத்துப் பத்திரிகைகளிலும் இவரது படைப்புக்கள் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.அதிகமான படைப்புக்கள் ஞாயிறு தினக்குரல்,தினகரன் வாரமஞ்சரி,வீரகேசரி வாரவெளியீடு,சுடர்ஒளி,தமிழன் வாரவெளியீடு ஆகிய பத்திரிகைளில் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.
ஆசிரியரான இவர் பாடசாலையில் அதிபர் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களோடும் கண்ணியமாகவும்,ஒழுக்கமாகவும் நடந்து கொள்கின்ற நல்ல பண்மைக்கொண்டவர்.இவரது மறைவினால் துயருற்றிருக்கின்ற இவரது குடும்பத்தினருக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தனது இரங்கள் செய்தில் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment