இலங்கை ரக்பி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் றக்பி சம்மேளனம் அங்குரார்ப்ணம் செய்து வைக்கும் நிகழ்வு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை , மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் றக்பி விளையாட்டை பிரபல்யப்படுத்தி கிராமப் புறங்களிலுள்ள சிறந்த றக்பி வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை தேசிய மட்ட றக்பி அணியில் இணைத்து மேலதிக பயிற்சிகளை வழங்கும் வகையில் இலங்கை றக்பி சம்மேளனத்தின் தலைவர் றிஸ்லி இல்யாஸ் அவர்களின் ஆலோசனையின் பேரில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் தலைமையில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபிர் பிரதி தலைவராகவும் , றக்பி பயிற்றுவிப்பாளர் லக்சிறி விக்ரமசிங்க , கிழக்கு மாகாண உடற்கல்வித்துறை பணிப்பாளர் ரோஹினி புவனசிங்கம் , அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.றிஸாத் , தென் கிழக்கு பல்கலைக்கழக உடற்கல்வித்துறை போதனாசிரியர் எஸ்.எம்.பி.அஸாத் , மூதூர் அல் ஹிலால் வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் ஏ.எச்.யஸீர் அறபாத் , இறக்காமல் ஒறாபி பாஸா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் கே.எல்.எம்.சக்கி ஆகியோர் உதவி தலைவர்களாகவும். நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியரும் தேசிய ஒலிம்பிக் குழுவின் உறுப்பினருமான அலியார் பைஸர் பொதுச் செயலாளராகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட மாபா முதியசிங்க , திலான் நீலருவன் , ஆகியோர் உதவி செயலாளர்களாகவும்,பொத்துவில் அல் கலாம் வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் எம்.எச்.எம்.முஸ்பிக் நிர்வாக செயலாளராக வும் பாலமுனை மின்ஹாஜ் வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் எம்.எச்.எம்.முஸ்பிக் பொருளாளராகவும் நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸாம் உதவி பொருளாளராகவும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எம்.றஜீப் , பொறியியலாளர் எம்.ஐ.எம்.இம்தாத் ஆகியோர் கணக்கு பரிசோதகர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வு நேரடியாகவும் ஸும் தொழில்நுட்பத்தினூடாகவும் இடம்பெற்றது.
போசகர்களாக இலங்கை றக்பி சம்மேளனத்தின் தலைவர் றிஸ்லி இல்யாஸ் , ஓய்வுபெற்ற சிரேஸடட பொலிஸ் அத்தியட்சகரும் தேசிய றக்பி அணியின் முன்னாள் வீரரருமான எம்.எம்.அப்துல் மஜீட் ( SSP) ஆகியோரும் , ஆலோசகர்களாக கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் , கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் ஆகியோரும் , நிதந்தர உறுப்பினராக இலங்கை றக்பி சம்மேளனத்தின் உறுப்பினர் சமரத் பெர்ணான்டோ அவர்களும் இவ்வமைப்பில் இடம்பெற்றுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திற்கான றக்பி விளையாட்டுக்கான இணைப்பாளராக தேசிய ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர் அலியார் பைஸர் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment