சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ( GMMS) 2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மணிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் மாளிகைக்காடு ரோயல் பாவா வரவேற்பு மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் என்.எம்.அப்துல் மலீக் , பொறியியலாளர் எம்.ஏ.எம்.ஸாஹிர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , பாடசாலை ஆசிரியர்கள் , பிரதேச பாடசாலை அதிபர்கள் , வர்த்தக பிரமுகர்கள் , கல்வியாளர்கள் , பெற்றோர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வெட்டுப்புள்ளிக்கு மேல் தெரிவு செய்யப்பட்ட 16 மாணவர்களும் மற்றும் 100 புள்ளிக்கு மேல் எடுத்த 99 மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்வு அனைவரினதும் பாராட்டைப் பெற்றது.
0 comments :
Post a Comment