இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தினால் "Empowering Widows and Women Headed Householders Through Sustainable Livelihood Program" எனும் கருப்பொருளின் கீழ் தெரிவு செய்யப்பட்டு வாழ்வாதாரம் வழங்கப்பட்ட குடும்பங்களின் சுயதொழில் முயற்சிகளை வலுவூட்டுவதற்கான பயிற்சிகள் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களை பொருளாதார ரீதியாக அவர்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்கிவித்து மேலும் வலுவூட்டுவதன் மூலம் நிலைபேறான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்களுக்குத் தேவையான கணக்கீட்டு முறைகள், நாளாந்த கணக்கீட்டு பதிவேட்டு முறைகள், வருமானத்தை கூட்டுவதற்கான வியாபார உக்திகள் தொடர்பில் ஒரு நாள் செயலமர்வாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
இச்செயலமர்விற்கு வளவாளர்களாக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னாஹ், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் ஆர்.எஸ். றிம்ஸியா ஜஹான், இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எஸ். சுபுஹான் ஆகியோர் கலந்து கொண்டு சுயதொழிலில் ஈடுபடும் பெண் முயற்சியாளர்களுக்குத் தேவையான இயலுமை விருத்தி ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் இவ் வேலைத்திட்டம் பற்றிய தெளிவையும் வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment