தற்போது இந் நாட்டில் மக்கள் போராட்டங்களால் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலைகளை சீர் செய்வதற்கு ஊரடங்கு சட்டமோ இராணுவ, போலீஸ் குவிப்போ தீர்வாக அமையப் போவதில்லை என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.
இன்று(01) வெள்ளிக் கிழமை அவரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது தற்போது இந்நாட்டில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றம் டொலர், எரிபோருள்,எரிவாயு தட்டுப்பாடு மின் துண்டிப்பு, வரிசைகள், மரணங்கள் என்பவற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்ற மக்கள் ஆர்ப்பாட்டங்களிளும் போராட்டங்களிளும், ஈடுபடுவதையும் ஆட்சியாளர்களின் அலுவலகங்களையும் இல்லங்களையும் சுற்றிவலைப்பதை காணக் கூடியதாக இருக்கின்றன.
மக்களின் இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தையும் போலீஸ், இராணுவத்தை குவித்து கண்ணீர்ப்புகை பிரயோகம், நீர்த்தாரை பிரயோகம் செய்கின்றனர்.
ஜனாதிபதியின் இல்லத்தை சுற்றி வளைத்த மக்கள் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் இல்லங்களை சுற்றி வளைக்க சற்றும் தயங்கப் போவதில்லை.
இன் நாடும் நாட்டு மக்களும் தாங்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளிலும் துண்பங்களிலும் இருந்து மீளுவதற்காக மேற்கொள்ளும் இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிக்க இடமளிக்காது அரசாங்கமும் அமைச்சரவையும் ஆட்சியை கைவிட்டு புதிய அரசாங்கம் ஒன்றை
அமைக்க வழிவிடுவது சிறந்த தீர்வாக அமையும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment