சுரவணையடியூற்று சிறார்களுக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து கற்றல் உதவி



காரைதீவு சகா-
பிரான்சில் மறைந்த செல்வி ஹரணிகா மொறிஸ் அவர்களின் இரண்டாவது வருட மறைவு தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய தும்பங்கேணி சுரவணையடியூற்று கிராம பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும் பாடசாலைஅனைத்து உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

சுரவணையடியூற்று கிராம வரலாற்றில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட விநாயகர் ஆரம்பப் பாடசாலைக்கு தளபாடங்களையும் அங்கு கல்வி பயில வந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும் சமூக செயற்பாட்டாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வு கிராம சபை தலைவர் எஸ். உதயகுமார் தலைமையில் பாடசாலையிலே இடம்பெற்றது.

கல்வி பயிலும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
நிகழ்வில் உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா இத்திட்டத்தின் இணைப்பாளர் ஆசிரியர் என்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு மரணித்த செல்வி ஹருணிகா அவர்களின் ஆத்மா சாந்தியடைய அங்கு அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மௌவுன அஞ்சலி செலுத்தினார்கள். மாவேற்குடா பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவநேசராசா ஆசியுரை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :