இலங்கை ஆசிரியர் சங்கம்,ஆசிரியர் விடுதலை முன்னணி ,மலையக ஆசிரியர் முனனணி,இலங்கை கல்வி சம்மேளனம், முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம் ஆகியன ஏனைய ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இன்று நுவரெலியா மாநகரில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தது.
எரிபொருள் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என்பவற்றைக் கண்டித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எரிபொருள் விலையேற்றத்தால் ஆசிரியர்கள்,அதிபர்கள் பாடசாலைக்கு செல்வதில் சிரமப்படுவதாகவும் தூர இடங்களுக்கு சென்று பணிபுரியும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகி வருவதோடு பேருந்துகளுக்கும் முச்சக்கர வண்டிகளுக்கும் அதிகளவில் பணத்தை செலவிடுவதால் தாங்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். நுவரெலியா காமினி தேசிய பாடசாலைக்கு முன்பாக அணிதிரண்ட அதிபர்,ஆசிரியர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக வந்து நுவரெலியா பிரதான தபாற்கந்தோருக்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் பெருந்திரளான அதிபர் ,ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
0 comments :
Post a Comment