புனித ரமழான் நோன்பை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று புத்தளத்தில் இடம்பெற்றது.
இலங்கை - சுவிஸர்லாந்து கலாசார அமைப்பின் நிதி அன்பளிப்பினால் 160 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதன்படி, புத்தளம் மன்னார் வீதி 2 ஆம் கட்டை பகுதியிலுள்ள மஸ்ஜிதுல் புஹாரி பள்ளிக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 120 குடும்பங்களுக்கும், முள்ளிபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 40 குடும்பங்களுக்கும் மேற்படி உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் புத்தளம் மன்னார் வீதியில் உள்ள மஸ்ஜிதுல் புஹாரி பள்ளி நிர்வாக சபை தலைவர் அப்துல் ஹமீத் , பேஷ் இமாம் அஷ்ஷெய்க் முஹம்மது ரிபாஸ் மற்றும் இலங்கை - சுவிஸர்லாந்து கலாசார அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி மஹ்ரூப் சம்சுதீன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment