சம்மாந்துறை பொலிஸ் நிலையம் விடுக்கும் முக்கிய அறிவித்தல் .



பாறுக் ஷிஹான்-
ம்மாந்துறை வாழ் பொதுமக்களே !

எரிபொருள் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தலைமையில் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் , நீர்ப்பாசன பொறியியலாளரின் பங்குபற்றுதலுடன் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதன் படி கடந்த வருடங்களைப் போன்று தேவையான தேவையான எரிபொருள் தங்களுக்கு கிடைப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் .

எனினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக மக்களின் நீண்ட வரிசை காணப்படுகின்றது . இதற்கு காரணம் சிலர் எரிபொருளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து பதுக்கி வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது .

எனவே பொலிஸாரினால் திடீர் சோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு எரிபொருள் பதுக்கி வைத்திருப்போர்கள் சம்மந்தமாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் .

இச் சோதனையின் போது கைப்பற்றப்படும் எரிபொருள் அரச உடமையாக்கப்படுவதுடன் உரிய நபருக்கு எதிராக பாவனையாளர் அதிகார சபையூடாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் .
இப்படிக்கு
பொறுப்பதிகாரி ,
பொலிஸ் நிலையம் ,
சம்மாந்துறை .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :